ராஜமவுலி முதல் அல்லு அர்ஜூன் வரை.. வாக்களித்த திரை பிரபலங்கள்!
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராணா டகுபதி, வெங்கடேஷ், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர். தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமாக 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் படிக்க
‘ஏசி வேணும்னா ஏதாவது மண்டபத்துக்கு போங்க.. ஏன் தியேட்டருக்கு வந்து திட்டுறீங்க’ - நடிகர் எஸ்.வி.சேகர் ஆதங்கம்
தான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை என பட விழா ஒன்றில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், ‘எமகாதகன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர், சென்சார் போர்டு விவகாரம் பற்றி பேசினார். அதில், “நான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை. இன்னைக்கு எல்லாருக்கும் யு சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்பது ஆசை. மேலும் படிக்க
'இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது’ - ஞானவேல் ராஜாவை சரமாரியாக சாடிய சமுத்திரக்கனி!
’பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில வாரங்களாக பூதகரமாக வெடித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இதுதான் காரணமா? - வெளியான புதிய தகவல்
கழுத்து எலும்பு தேய்மானமே விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ” விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நீராக இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிரது. மேலும் படிக்க
'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா? - கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகர்..
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 171 ' படத்தில் வில்லனாக இணைய உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி வரை வசூலை செய்து சாதனை படைத்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு இப்படம் சிறந்த ஒரு கம்பேக் படமாக அமைந்தது. மேலும் படிக்க
பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் தற்போது பேசப்பட்டு வரும் விஷயம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பாகத்தான்.17 வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் பின்னணியில் இப்படியான பிரச்னைகள் இருப்பது தற்போது கிளம்பியுள்ள புகைச்சலுக்குப் பின்னர்தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நடிகர் கார்த்தியின் 25 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அமீர் வரவில்லை. மேலும் படிக்க