தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமாக 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் தெலுங்கானா நடிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாக்களித்தனர். ஜூனியர் என்.டி.ஆர். அவரது மனைவி பிரணதி, அவரது தாய் ஷாலினி நந்தமுரி உள்ளிட்டோர் ஐதரபாத்தில் வாக்களித்தனர். இதேபோல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா உள்ளிட்டோர் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர். நடிகர் அல்லு அர்ஜூன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஜூப்ளி மலைபகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதேபோல் எஸ்.எஸ். ராஜமவுலி தனது மனைவியுடன் இணைந்து வாக்களித்ததை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோன்று நடிகர்கள் வெங்கடேஷ் டகுபதி, ராணா டகுபதி, நிதின், ஸ்ரீகாந்த் மகன் ரோஷன் உள்ளிட்டோர் ஐதரபாத்தில் வாக்களித்தனர்.
மேலும் படிக்க: Paruthiveeran Row: பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்