Vijayakanth: கழுத்து எலும்பு தேய்மானமே விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ” விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நீராக இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிரது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.
இதனால் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் “ தற்போது விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவரால் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாமல் இருந்தது. தற்போது அது கூட முடியவில்லை. விஜயகாந்திற்கு முதுகு தண்டு பிரச்சனை சரியாகவில்லை. கழுத்தோடு இணையும் முதுகுத் தண்டு தேய்மானம் ஏற்பட்டு விட்டதால், ஞாபக சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரை சந்திப்பதில்லை. இந்த நிலையில் அவரால் மூச்சு விட முடியாமல் போனது.
தற்போது நிலவும் கால நிலையால் விஜயகாந்த் மூச்சு விடமுடியாததால், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் எந்த உதவி வேண்டுமானாலும் வழங்க தயாராக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்திடம் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாததால் அவர் மேலும் சில நாட்கள் சிகிச்சையில் இருக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படியான நிலையில் தான் விஜயகாந்தின் சுவாச பிரச்சனைக்கு டிரக்கியஸ்டமி சிகிச்சை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. கடந்த நவம்பர் 18ம் தேதி போரூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Fight Club: முதல் படமே ஆக்ஷன்தான்...லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!