- Surya Vijay sethupathi: "நான் வேற மாதிரி” .. அப்பா கூட கம்பேர் பண்ணாதீங்க.. விஜய் சேதுபதி மகன் பேச்சு..
விஜய்சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது அனல் சார் மூலமாக நிறைவேறப்போகிறது. அப்பா வேற நான் வேற. அவருடைய மகன் என்ற அடையாளத்தை எங்கும் உபயோகிக்க கூடாது என நினைக்கிறன். அதனால் தான் போஸ்டரில் கூட சூர்யா என்று தான் பெயர் இருக்கிறதே தவிர சூர்யா விஜய் சேதுபதி என இல்லை என தெரிவித்தார். மேலும் படிக்க
- Kantara Update: ”காந்தாரா” படத்தின் இரண்டாம் பாக தலைப்பு வெளியீடு..! ஃபர்ஸ்ட் லுக்கிற்கான தேதியும் அறிவிப்பு
காந்தாரா-2 படத்தை தயாரிக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கடந்த காலத்தின் புனிதமான எதிரொலிகளுக்குள் நுழையுங்கள், அங்கு ஒவ்வொரு இடத்திலும் தெய்வீகம் பின்னி இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாததைக் காண மயங்கி இருங்கள். இது ஒளி அல்ல, தரிசனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இடம்பெற்றுள்ள போஸ்டரில், ”காந்தாரா A LEGEND CHAPTER" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ம் தேதியன்று நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்குவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க
- Silambarasan TR: ‘சிம்பு வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள்’ .. என்னன்னு தெரியனுமா.. இதை கொஞ்சம் படிங்க..!
2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிம்புவுக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் மறு பிறவி நாளாகும். ஆம். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த “மாநாடு” படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பலரும் நடித்திருந்தனர். மேலும் படிக்க
- Ameer : நான் உண்மையை சொன்னால் பலருக்கும் சிக்கல் வரும்... அவதூறுகளுக்கு அறிக்கை மூலம் அமீர் பதிலடி!
பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்த திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட இந்த பிரச்சினையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அன்று நடந்த உண்மையை சொல்வதற்கு எனக்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது ஆனால் அது பலரின் வாழ்க்கையிலும் புயலை கிளப்பி விடும் என்பதால் அமைதியாக இருக்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க
- Meetha Ragunath Engagement : குட் நைட் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... வருங்கால கணவருடன் ஒரு கிளிக்... வைரலாகும் புகைப்படம்
ஊட்டியை சேர்ந்த மீதா ரகுநாத், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்து 'முதலும் நீ முடிவும் நீ' ஆடிஷனில் கலந்து கொண்டு அதில் தேர்வானார். குட் நைட் படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மீத்தா ரகுநாத் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மீதா ரகுநாத்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. மேலும் படிக்க