அடேங்கப்பா..! இதுவரை ரூ.300 கோடி.. வசூலை வாரிக்குவிக்கும் பொன்னியின் செல்வன் 2..!
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் நடித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- இராவண கோட்டம் படத்திற்கு எதிராக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்த நாடார் சங்கம்..!
சாதிய மோதல்களை தூண்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இராவண கோட்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சர் தனி பிரிவில் நாடார் சங்கத்தினர் புகாரளித்துள்ளனர். கிராமப் பின்னணியை மையமாக கொண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். மேலும் கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளா. இந்த படம் மே 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கிட்டதட்ட 10 வருடங்களுக்குப் பின் விக்ரம் சுகுமாரன் படம் இயக்கியுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும் படிக்க
- இந்துக் கடவுள்களை அவமதித்ததாக, இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்குப்பதிவு..
சென்னை, அபிராமபுரம், ராஜரத்தினம் அரங்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சிகப்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுதொடர்பாக புகாரளித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறை, பாஜவினருக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
- பாகுபலி பிரபாஸின் முதுகில் குத்திய ரசிகர்கள்.. ஆன்லைனில் கசிந்தது ஆதிபுருஷ் டிரெய்லர்
பிரபாஸ், கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் பட ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் 3டி-யில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் இன்று பிற்பகல் 1.53 மணியளவில் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஹைதராபாத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் படத்தின் ட்ரெய்லர் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட ட்ரெய்லர் காட்சிகளை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் படிக்க
- 13வது மாடி; 3 BHK; 6 பார்க்கிங் வசதி: சமந்தாவின் புதிய வீடு இவ்வளவு கோடியா?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா ஹைதராபாதில் புதிதாக ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். 13ஆவது மாடியில் அமைந்த இந்த வீட்டை 7.8 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கியுள்ளார் சமந்தா. அவர் தற்போது தனக்கு திருமணமான போது நாகசைதன்யாவுடன் வசித்து வந்த அதே வீட்டில்தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க