நடிகை சமந்தா ஹைதராபாதில் புதிதாக 3bhk ஃபிளாட் ஒன்றைவாங்கியுள்ளார். 13ஆவது மாடியில் அமைந்த இந்த வீட்டை 7.8 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கியுள்ளார் சமந்தா.
தென் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான் சமந்தா தற்போது ஹைதராபாதில் புதிதாக 3bhk வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.7.8 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்து வீட்டின் சிறப்பம்சங்கள் பற்றிதான் இணையம் முழுவதும் பேச்சாக இருக்கிறது.
ஹைதராபாத்தில் ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி என்கிற இடத்தில் சமந்தா இந்த வீட்டை மொத்தம் 7.8 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இந்த வீடு 13 மற்றும் 14 மாடியில் அமைந்துள்ளது.13 ஆவது மாடியில் 7,944 சதுர அடியில் பிரமாண்டமான இடத்தையும் 14 ஆவது மாடியில் 4,024 சதுர அடியும் கொண்டிருக்கிறது இந்த வீடு. இந்த வீட்டில் மொத்தம் ஆறு பார்க்கிங் வசதிகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த வீட்டின் உள்புற வடிவமைப்பு மொத்தமும் முடிந்துவிட்டதாகவும் மிகவும் நவீனமான முறையில் இந்த வீடு கட்டமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.
நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்று சொல்லப் படுகிறது. இந்த மதிப்பு அவருக்கு சொந்தமான வீடு, land rover, bmw ஆகிய கார்களையும் உள்ளடக்கியது. சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 3 இலிருந்து 4 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதே சமயத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெறுபவர் சமந்தா.
சமந்தா தற்போது தனக்கு திருமணமான போது நாகசைதன்யாவுடன் வசித்து வந்த அதே வீட்டில்தான் வசித்து வருகிறார். தனது விவாகரத்திற்குப் பின் இந்த வீட்டிற்காக மொத்தம் 100 கோடி ரூபாய் சமந்தா கொடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு நிரூபிக்கும் சான்றுகள் எதுவும் இல்லை. தற்போது சமந்தாவின் இந்த வீடு அவருக்கு முற்றிலும் புதிய ஒரு இமேஜைக் கொடுத்துள்ளது.
சமந்தா தற்போது புகழ்பெற்ற ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய சிடெடல் தொடரின் இந்தியப் பிரதியில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருன் தவான் நடிக்கிறார். இதன் வெளியிடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அண்மையில் லண்டன் சென்றிருந்தார் சமந்தா. இந்த நிகழ்வு குறித்த தனது அனுபவங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மிக மகிழ்ச்சியாக வெளிப்படித்தியிருந்தார் சமந்தா.
இந்த நிகழ்வை முடித்து தற்போது தான் நடித்துள்ள குஷி திரைப்படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் வந்துள்ளார் சமந்தா. தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குஷி. இதில் சமந்தாவுடன் விஜய் தேவர்கொண்டா இணைந்து நடித்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு குஷிப் படத்தில் முதல் பாடல் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.