Ponniyin Selvan 2 Box Office Collection: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிகளை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பொன்னியின் செல்வன் 2


தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை இந்தப் படத்தை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு கைவிட்ட நிலையில், இறுதியாக லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க தன் கனவுப் படமான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளார். சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் இந்தப் படம் மொத்தம் 500 கோடிகள் வரை வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் ஹிட்  படமாக வசூலித்துள்ளது.  


இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி,  ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு எனப் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்து பரவலாக படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை அள்ளியது. ஆனால் திரைக்கதைக்காக இயக்குநர் மணிரத்னம் கதையில் சில மாற்றங்கள் செய்த நிலையில், நாவல் வாசகர்களை படம் அதிருப்தியில் ஆழ்த்தி விமர்சனங்களைப் பெற்றது.


ரூ.300 கோடி வசூல்


இந்நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான 11 நாட்களில் ரூ.300 கோடி வசூலை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும், பொன்னியின் செல்வம் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 500  கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருந்தது. இதனை இரண்டாம் பாகம் வசூலில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு தலைகிழாக போய்விட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் முதல் பாகத்தின் வசூலை இந்த இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.