அன்னக்கிளி' கொடுத்த அன்பு பரிசு இளையராஜா.. தமிழ் சினிமா வரலாற்றில் இசையின் அளவுகோல்..!  


தமிழ் சினிமாவின் அகராதியில் இசை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சினிமாவின் இசையை இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்கு பின் என்பது தான் ஒரு சாமானிய இசை ரசிகனின் அளவுகோலாக இருந்தது. அவர் நம் தமிழ் சினிமா கண்டெடுத்த ஒரு பொக்கிஷம். அவரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாச்சலத்தையே சேரும்.  தமிழ் சினிமாவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படமாக கருதப்படுவது 'அன்னக்கிளி' திரைப்படம். மேலும் படிக்க


'திருமதி இர்ஃபான்.. உனக்காக என் இதயம் இறுதிவரை துடிக்கும்..' கல்யாண போட்டோ பகிர்ந்த யூடியூபர் இர்ஃபான்!


பிரபல யூடியூபர் இர்ஃபான் தன் திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு நெட்டிசன்கள் உற்சாகமாக வாழ்த்து கூறி வருகின்றனர். இன்றைய இணைய உலகில்  திரைப் பிரபலங்களுக்கு சரிசமமாக ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக வலம் வந்து திறமையாக சம்பாதித்தும் வருபவர்கள் யூடியூபர்கள். அப்படி தமிழில் உள்ள ஏராளமான யூடியூபர்களில் முன்னோடியாகவும், பல ரசிகர்களைக் கொண்டும் வலம் வருபவர் உணவுப் பிரியரான யூடியூபர் இர்ஃபான். மேலும் படிக்க


ரூ.100 கோடி வசூலித்த தி கேரளா ஸ்டோரி.. சர்ச்சைகள் தொடங்கி பிரதமர் பாராட்டு வரை... கடந்து வந்த பாதை!


பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி வசூலைக் குவித்து 100 க்ரோர் க்ளப் படங்களில் இணைந்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என பல அரசியல் தலைவர்கள் தொடங்கி இப்படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பிரதமர் மோடி தொடங்கி பாஜகவினர் பலரும் தீவிரவாதத்துக்கு எதிரான படம் தி கேரளா ஸ்டோரி என முன்மொழிந்து பாராட்டினர். மேலும் படிக்க


நடிகை நஸ்ரியா வெளியிட்ட ஷாக் அறிவிப்பு: சோகத்தில் ரசிகர்கள்


கடந்த 2006-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பளுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை அடுத்து வெளியான பிராமணி, ஒரு நாள் வரும் உள்ளிட்ட  மலையாள திரைப்படங்களிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்பத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நஸ்ரியா ஏராளமான இளம் ரசிகர்களை பெற்றார். இவரின் க்யூட் புன்னகையும், இன்னசண்ட் முகமும், குறும்புத்தனமான நடிப்பும் தமிழ் இளைஞர்களை கொண்டாட வைத்தது. மேலும் படிக்க


டும்.. டும்.. டும்..! ஆம் ஆத்மி எம்.பி.க்கும் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் நிச்சயதார்த்தம்...! குவியும் வாழ்த்துகள்..!


பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி எம்.பி. ராகவ்சட்டா இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமாக நிச்சயம் நடைபெற்றது. பாலிவுட்டின் பிரபல நடிகையும் ப்ரியங்கா சோப்ராவின் அத்தை பெண்ணுமான பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் தொடர்ந்து பல பொது இடங்களில் ஒன்றாக வலம் வரத் தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு மௌனம் சாதித்து வந்தனர். மேலும் படிக்க