கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன், நடிகர் கம்ல்ஹாசனுடன் இணைந்து நடித்த விக்ரம் படங்களைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்க பிரமாண்ட பொருட்செலவில்  தயாராகி வரும் திரைப்படம் கங்குவா.


கங்குவா:


தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ஆகியோரை இயக்கி தவிர்க்க முடியாத கமர்சியல் இயக்குநராக உருவெடுத்துள்ள சிவா அடுத்ததாக இந்தப் படத்தை இயக்கும் நிலையில்,  யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


பாலிவுட் நடிகை திஷா பதானி, சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர் ஆகியோர் ஹீரோயின்களாக இப்படத்தின் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் கங்குவா படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போஸ்டர்:


சூர்யாவின் 42ஆவது படமான இப்படத்தின் கதை பதினாறாம் நூற்றாண்டில் நடப்பது போலவும், ஃபேண்டஸி கதையாகவும் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும்,  13 கதாபாத்திரங்களில் சூர்யா இப்ப்படத்தில்  நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படம் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. 


முன்னதாக படத்தின் ஷூட்டிங் கோவா,பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா உள்பட பல இடங்களில் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. 


வைரலாகும் புகைப்படம்:


கங்குவா எனும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு நெருப்பு சக்தி மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என விளக்கமும் அளிக்கப்பட்டது.  சூர்யா இப்படத்துக்காக வெயிட் ஏற்றி முழுவீச்சில் நடித்து வரும் நிலையில் முன்னதாக இப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவடைந்தது.


இந்நிலையில், கங்குவா குழுவினரான சூர்யா - சிறுத்தை சிவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


கங்குவா Happy Vibes எனும் கேப்ஷனுடன் வெற்றி பழனிசாமி இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், முன்னதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் புகைப்படத்தை தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 


 






இந்தப் புகைப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக சூர்யா கங்குவா படத்துக்காக ஒர்க் அவுட் செய்து தன் உடலை முறுக்கேற்றும் புகைப்படம் இதேபோல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: The Kerala Story: ரூ.100 கோடி வசூலித்த தி கேரளா ஸ்டோரி.. சர்ச்சைகள் தொடங்கி பிரதமர் பாராட்டு வரை... கடந்து வந்த பாதை!