’எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா’ .. பட்டையை கிளப்பும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ..!


நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ இடம் பெற்றுள்ள பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு 2வது முறையாக இணைந்துள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படமானது அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. மேலும் படிக்க


ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்க... திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்..காரணம் தெரியுமா?


அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் படத்தை தடை செய்யக்கோரியும், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர். ராமர் மற்றும் அனுமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க


சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு... அனுமதிக்கு இவ்வளவு கோடி!


சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முக்கியக் காட்சிகள், விமான நிலைய கழிவறைகளில் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விமான நிலைய படப்பிடிப்புக்காக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 1.24 கோடி ரூபாய் செலுத்தி இந்திய 2 படக்குழுவினர் அனுமதி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க


தந்தை, தாயாக புரமோஷன் பெற்ற ராம் சரண் - உபசனா ஜோடி.. குவியும் வாழ்த்துகள்.. என்ன குழந்தை?


நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா குழந்தையை பெற்றெடுத்ததை தொடர்ந்து அந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராம் சரண் - உபசனா தம்பதிக்கு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அந்த மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து முதலில் தகவல் வெளியானது. அதைதொடர்ந்து மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையின்படி, ”ராம் சரண் மற்றும் உபசனா தம்பதிக்கு ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 20ம் தேதி அதிகாலையில் பெண் குழந்தை பிறந்ததாகவும், தாய்- சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க


வருங்கால தமிழக முதலமைச்சரே.... சர்ச்சையைக் கிளப்பும் விஜய் பிறந்தநாள் பேனர்..!


புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்த  நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதமைச்சரே எனக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா டூ அரசியல் பயணிக்க நடிகர் விஜய் அச்சாரமிட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 17ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம்  விருதுகள் வழங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் படிக்க


திரை இசை மட்டுமே இசையல்ல... நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தமிழ் சுயாதீன இசைக்கலைஞர்கள்!


மேற்கு நாடுகளில் பாப் சிங்கர்கள் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு நிகராக புகழ்பெற்றவர்கள். அவர்களுக்கு நிகராக சம்பாதிப்பவர்கள். உலகம் முழுவது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர்கள். ஆனால், இந்தியாவில் இண்டிபெண்டண்ட் இசை எனும் சுயாதீன இசை இப்போது தான் அரும்பு விட்டிருக்கிறது என்று சொல்லலாம். திரைப்படங்களுக்கு அப்பால் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையை முழுமூச்சாக செய்து வருகிறார்கள். மேலும் படிக்க