அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் படத்தை தடை செய்யக்கோரியும், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர். ராமர் மற்றும் அனுமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதிபுருஷ் படம் அமைந்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்துக்கள், சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் ஆதிபுருஷ் படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் மீது வழக்குப் பதிவு செய்ய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர். 


ராமாயண கதையை மையமாக வைத்து தயாரான ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்தது. இதில் பிரபாஸ் ராமராகவும் சயீப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். கீர்த்தி சனோன் சீதையாக நடித்துள்ளார்.  500 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆதி புருஷ் படம் திரைக்கு வரும் முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. மீசையுடன் இருந்த பிரபாசின் ராமர் தோற்றத்தை பலர் விமர்சித்தனர். டிரெய்லரில் இருந்த காட்சிகளும் எதிர்ப்பை கிளப்பியது.  இந்நிலையில் நேபாள நாட்டிலும் இப்ப்டத்தில் இடம் பெற்ற சீதை இந்தியாவின் மகள் என்ற வசனத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த வசனத்தை நீக்கினால் தான் நேபாளத்தில் திரையிட அனுமதிப்போம் என்று அங்குள்ள மேயர் நிபந்தனை விதித்தார். இதையடுத்து அந்த வசனத்தை நீக்கப்பட்டது.



கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படம்  குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் வசூல்ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.140 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இரண்டாவது நாளில் படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் முதல் மூன்று நாட்களையும் சேர்த்து படம் உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் படம் குறைந்த வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க 


Leo: 2000 டான்சர்களுடன் 7 நாள் ஷூட்டிங்... நா ரெடி பாடலுக்காக சொன்னதை செய்த விஜய்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!


கலைஞர் கோட்டம் திறப்பு விழா: சென்னை வர இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வருகை ரத்து.. காரணம் என்ன?