திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குநர்.. வலுக்கும் எதிர்ப்பு


திருப்பதி கோயிலில் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து  ‘ஆதிபுருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயிப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


'எனக்கு இந்த இயக்குநரை இயக்க வேண்டும் என ஆசை’ : யாரை சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா?


தமிழ் சினிமாவில் இயக்குநர் ஒருவரை நடிகராக இயக்க வேண்டும் என்கிற ஆசையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் இயக்குநராகவும், நடிகராகவும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனி இடமுண்டு. வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், குஷி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றார். தொடர்ந்து நியூ படத்தின் மூலம் நடிகராகவும் எண்ட்ரீ கொடுத்தார். மேலும் படிக்க


ஒரு வழியாக முடிவுக்கு வந்த எதிர்பார்ப்பு.. நயன்தாரா, ஜெயம் ரவியின் ‘இறைவன்’ பட ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்..


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வரும் ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் நடப்பாண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியானது. இரு படங்களிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. மேலும் படிக்க


விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம கிஃப்ட்..லியோ படத்தில் இணைந்த கமல்..!


கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யும் இணைந்துள்ள படம் “லியோ”. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படிக்க


விறுவிறு சஸ்பென்ஸ் த்ரில்லர்.... ஃபஹத் ஃபாசிலின் ‘தூமம்’ பட ட்ரெய்லர் வெளியீடு!


நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள தூமம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மல்லுவுட் கடந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தன் நடிப்புக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்  ஃபஹத் ஃபாசில். இறுதியாக மலையாளத்தில்  ஃபஹத் ஃபாசில் நடிப்பில் 'பாச்சுவும் அத்புத விளக்கும்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் சென்ற வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது. மேலும் படிக்க