’பொண்ணு, மண்ணுக்காக’ நடக்கும் முத்தையாவின் சண்டைக்கதை... காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் எப்படி இருக்கு?


முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விருமன்’ படத்துக்குப் பிறகு மற்றொரு  தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடன் ‘பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும்’ சண்டை செய்யும் ஊரைப் பற்றிய கதைக்களத்துடன் முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது? மேலும் படிக்க


'தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ ஆனரா ஹிப்ஹாப் ஆதி?’ - வீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!


இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அன்பறிவு படத்துக்குப் பிறகு இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் “வீரன்”(Veeran). இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆதிரா,காளி வெங்கட், முனீஸ்காந்த், வினய்,சசி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் ஃபார்முலாவில் இந்த படம் உருவாகியுள்ளது.


“நான் ராஜா... எப்போதுமே” இசைஞானி இளையராஜாவுக்கு 80-வது பிறந்தநாள்!


"ராஜாதி ராஜன் இந்த ராஜா…" என்று அவரே பாடும்போது கண்ணில் தெரியும் கர்வமும் பெருமையும் கொஞ்சமும் கூடுதல் இல்லை என்று அவர் பாடலைக் கேட்டு உருகும் அனைவருக்கும் புரியும். "அவர் அவ்ளோதான் டொக்காகிட்டார்…", என்று நினைத்த எல்லோரிடமும் காட்டுமல்லியை சுவாசிக்க தந்துவிட்டு அமைதியாக நிற்கிறார். 'மாடர்ன் லவ்'வுக்கு மாடர்னாக இசை அமைத்து தன் இருப்பை அழுந்தப் பதிக்கிறார். பாளையம் பண்ணையப்புரம், சின்னத்தாயி பெத்த மவன் இதே தேதியில் தான் 1943 இல் பிறந்து இசை அரசனாக வாழ்ந்து வருகிறார். மேலும் படிக்க


‘எனக்கு எண்டே கிடையாது; திரும்பவும் நடிக்க வரலாம்’ ... இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்


நான் திரும்ப படம் நடிக்க வந்தால் கண்டிப்பாக அது  மாரி செல்வராஜின் படமாக இருக்கும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


4 ஆண்டுகளாக காத்திருந்த உதயநிதி.. பிடிக்காத கதையை சொன்ன மாரி செல்வராஜ்.. 


மாமன்னன் படம் உருவான கதையை  அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ள படம் “மாமன்னன்”.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் படிக்க


கலைஞருக்காக மாற்றிக்கொண்ட இசைஞானி: பிறந்தநாள் ரகசியம் இதுதான்! பின்னனி கதை என்ன?


ஜூன் மாதம் பிறந்தாலே திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் காரணம் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்த ஒப்பற்ற இசை மேதை. கடந்த 4 தசாப்தங்களாக அவரின் இந்த திரைப்பயணத்தில் எண்ணற்ற இனிமையான பாடல்களை கொடுத்த வித்வான். எந்த ஒரு மன நிலைக்கும் ஏற்ற வகையில் படல்களின் மூலம் மனதை இசையால் சாந்தப்படுத்த கூடிய வித்தகர். மேலும் படிக்க