எப்பவும் ஒரே சூப்பர் ஸ்டார் தான்... ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் அரங்கத்தை அதிரவிட ரஜினி ரசிகர்கள் திட்டம்?
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இசை வெளியீட்டைத் தாண்டி இந்த நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் வேறொரு திட்டமும் வைத்திருக்கிறார்கள். யார் உண்மையான் சூப்பர்ஸ்டார் என்பது இன்று மாலை தெரியவந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என இணையத்தில் கருத்து பரிமாறி வருகிறார்கள்! மேலும் படிக்க
வாரிசு பட்டம் மட்டும் போதுமா? அதையும் தாண்டிய பான் இந்திய ஸ்டார்! எவர் சார்மிங் ஆக்டர் துல்கர் சல்மான்!
தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் சாக்லேட் பாய், ரசிகர்களின் ஃபேவரட் ஹார்ட் த்ரோப் துல்கர் சல்மான். மலையாள திரையுலகின் மாபெரும் நட்சத்திரமான மெகாஸ்டார் மம்மூட்டியின் மகன் என்ற அறிமுகத்துடன் படங்களில் தனது பயணத்தை தொடங்கியவர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2012ம் ஆண்டு வெளியான 'செகண்ட் ஷோ' படம் மூலம் அறிமுகமான துல்கர் சல்மான் 10 ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் படிக்க
வீண் வதந்திகளை நம்பாதீங்க.. பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கொடுத்த நாசர்
திரைப்பட ஊழியர்கள் சங்கத்தின் புதிய நெறிமுறைகளைத் தொடர்ந்து பவன் கல்யாண் பேசியதை மறுத்து விளக்கமளித்துள்ளார் நடிகர் நாசர். ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்வில் நடிகர் பவன் கல்யாண் தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களைவிட தமிழ் நடிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தென் இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட புதிய நெறிமுறைகளை சுட்டிகாட்டி பேசினார். மேலும் படிக்க
த்ரில்லர் முதல் ரொமான்டிக் படம் வரை.. இன்று தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
இன்று (ஜூலை 28) வெளியாக இருக்கும் பல்வேறு கதைக்களத்தைக் கொண்ட படங்கள் பற்றி நாம் காணலாம். சந்தானம் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘டிடி ரிடர்ன்ஸ்’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை மனிதர்களுடன் கேம் ஷோக்களை நாம் பார்த்திருப்போம் . தற்போது முதல் முறையாக பேய்களுடன் கேம் ஷோவை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. மேலும் படிக்க
'ராஜ்யமா இல்லை இமயமா?’ .. 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலை.. ரஜினி ப்ளான் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இமயமலைக்கு செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்திற்கு சினிமாவை தாண்டி ஆன்மிகம் மேல் அளவுக்கடந்த நம்பிக்கை உள்ளது. இதுவே அவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்க காரணமாக அமைகிறது. இவர்கள் காலம் வரும் போது ரஜினி சொன்ன ஆன்மிக பேச்சுகளை ஸ்டேட்டஸ்களாக அப்டேட் பண்ணுவார்கள். மேலும் படிக்க
தனுஷூம் இவரும் சேர்ந்து மிரட்டப்போறாங்க... ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர்ஸ்டாரின் ரோல் இதுதான்!
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நடிகராக உள்ள தனுஷ் கடைசியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. தமிழில் 'சாணி காயிதம்', 'ராக்கி' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடத்தில் கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் படிக்க