ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்தது படக்குழு


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். மேலும் படிக்க


நகைச்சுவையால் நிரம்பிய சத்திய சோதனை.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழு விமர்சனம் இதோ..!


ஒருவன் நேர்மையாக நடந்துகொள்வதால் எதிர்கொள்ளும் சோதனைகளை விளக்குகிறது சத்திய சோதனை.  தமிழ் சினிமாக்களில் காவல்துறை காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வசனம், ‘தண்ணி இல்லாத காட்டிற்கு மாத்திடுவேன்” என மேல் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் கூறுவார்களே, அப்படியான தண்ணி இல்லாத காட்டில் உள்ள காவல் நிலையம். மேலும் படிக்க


ஜாம்பவான் நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ‘ஜோசஃபின் சாப்ளின்’ உயிரிழப்பு!


உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினின் மகள் ஜோசஃபின் சாப்ளின் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சார்லி சாப்ளின்தான். நடிகராக மட்டுமில்லாமல் தனது படங்களை தானே இயக்கவும் செய்தவர் சார்லி சாப்ளின். த டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் ஆகியப் படங்களில் தனது நகைச்சுவையால் மிகப்பெரிய அரசியல் கருத்துக்களைப் பேசியவர். மேலும் படிக்க


சிறந்த நடிகருக்கான விருதை வென்ற மம்மூட்டி.. மகன் துல்கர் சல்மான் செய்த சிறப்பான சம்பவம்..!


 நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை வென்றுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. தனது தந்தையை பாராட்டு விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசமழையைப் பொழிந்துள்ளார் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வருபவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி.  மேலும் படிக்க


ரிலீசுக்கு முன்னரே எழுந்த சிக்கல்.. துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா காட்சிகள் நீக்கமா?


விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகிய நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் படிக்க


மோசடி கும்பல்! நடிக்க கூப்பிட்டா ஜாக்கிரதை! அலெர்ட் செய்யும் ராஜ்கமல் நிறுவனம்!


நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மணிகண்டன் என்பவர் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க


இந்தியாவில் அமோக வசூல்... சவால் விடும் 'பார்பி'.. ஓப்பன்ஹெய்மர் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!


அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட்.ஜே.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஓப்பன்ஹெய்மர் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஓப்பன்ஹெய்மர் படம் முதல் நாளில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்று தெரிந்துகொள்ளலாம். மேலும் படிக்க