நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சிறப்புவாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதன் ஒரு நிகழ்வாக ஆடி மாதத்தில் ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடிபூரத் திருவிழா கடந்த 12ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தினந்தோறும் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 10ம் திருவிழாவான நேற்று இரவு அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா (சீமந்தம்) அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது.




முன்னதாக ஹோம குண்டம் வளா்க்கப்பட்டது. கும்ப நீரால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அா்ச்சகா் கா்ப்பிணிப் பெண்களுக்கு செய்வதுபோல் அம்பாளின் கைக்கு வளையல் போட்டும், காலில் நலுங்கு மஞ்சளும் இட்டனா். தொடா்ந்து காந்திமதி அம்பாளின் மடியில் முளைபயிறு கட்டும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னா் அம்பாள்  தன் அழகை காண கண்ணாடி காட்டும் நிகழ்வு நடைபெற்றது. அம்பாளுக்கு திருஷ்டி சுற்றும் வைபவம் நடைபெற்று பாலும் பழமும் அளிக்கப்பட்டு பெண்களால் ஆரத்தி எடுக்கப்பட்டது.  பக்தா்களின் ஆரவாரத்துடன்  தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிழ்வுக்கு  வந்திருந்த பக்தா்கள் அனைவருக்கும் வளையல், முளைகட்டிய பயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தை இல்லாத தம்பதியா்  இதை வாங்கி உண்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆன்மிக அன்பா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண