இந்தியாவில் களைகட்டும் ப்ரீ புக்கிங்... 100 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ்... ‘ஓப்பன்ஹெய்மர்’ ஃபீவரில் ஹாலிவுட்!


கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் ஜுலை 21ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  இந்நிலையில் இந்தியாவில்  ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோஃபர் நோலன், அணு ஆயுதத்தை முதன்முதலில்  கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்கியுள்ளார். மேலும் படிக்க


பிராஜக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் எப்படி?


இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் பிராஜக்ட் கே. பிரபாஸ், கமல்ஹாசன், ராணா டகுபதி, தீபிகா படுகோன் என இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மெகா பட்ஜட் படங்களில் நடிப்பதற்கு பெயர்போனவர் பிரபாஸ். தற்போது தனது அடுத்தப் படமாக பிராஜக்ட் கேவில் நடிக்கத் தயாராகிவிட்டார். மேலும் படிக்க


மீண்டும் காமெடி கேரக்டரில் நடிகர் சந்தானம்...அவரே கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி


நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வருகிற 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். மேலும் படிக்க


ரஜினியுடன் அடுத்த படம்.. அஜித் படம் இயக்குவது எப்போது? - அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!


ரஜினியுடன் படம் பண்ணுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாக தெரிவித்துள்ளார். வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீதான காதலால் திரைத்துறைக்குள் நுழைந்தார். மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கினார். மேலும் படிக்க


சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அருண் விஜய்.. மாவீரன் படம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த நடிகர் அருண்விஜய் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூலை 14 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ படம் வெளியானது. ப்ரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு மாவீரன் படத்தின் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் படிக்க


'லால் சலாம்' நடிகைக்கு ஓராண்டு சிறை தண்டனை... சிரஞ்சீவி பற்றிய அவதூறு வழக்கில் தீர்ப்பு!


ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகைக்கும் அவரது கணவருக்கும் அவதூறு வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  ‘உறவை காத்த கிளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜீவிதாவும், ‘இது தாண்டா போலீஸ்’ படம் மூலம் பிரபலமான நடிகர் ராஜசேகரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தெலுங்கி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்துள்ளனர். மேலும் படிக்க