நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் வருகிற 28ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இந்த படம் திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் வெளியாகும்.


அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருக்கிறது. தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறேன். நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா, தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது. நகைச்சுவை நடிகராக இருந்த போது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தேன். தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். இதே போல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.


திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை முடிந்தவரை இயக்குநர்கள் தவிர்ப்பது நல்லது” எனத் தெரிவித்தார். காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்துள்ளேன். இது தொடர்பாக நான் பதில் அளித்தால், காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள்” எனப் பதிலளித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண