Entertainment Headlines July 17: டிசம்பரில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்.. துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்.. இன்றைய சினிமா செய்திகள்...!

Entertainment Headlines Today July 17th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

Continues below advertisement
  • செம அப்டேட் கொடுத்த ஜவான் படக்குழு.. போஸ்டரில் கெத்து காட்டும் நயன்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வசூல் ரீதியான படங்களை இயக்கி ஹிட் கொடுத்த அட்லீ இந்தியில் எடுக்கும் முதல் படம் ஜவான்.  இந்த படத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நயன்தாராவின் மிரட்டல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

  • வந்தாச்சு.. வந்தாச்சு.. டிசம்பரில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம் - அப்டேட் கொடுத்த படக்குழு

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகி இருக்கும் ’மெரி கிறிஸ்துமஸ்’ படம் டிசம்பரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய்பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருசில காரணங்களால் அது முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

  •  “அவன் போறான் பிளைட்டுல, கையில இன்னும் மாட்டுல”.. துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது சிங்கிள் புரோமோ..!

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாக உள்ள இரண்டாவது பாடலுக்கான புரோமோவை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். “His Name Is John” என தொடங்கும் இந்த பாடலை வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.விரைவில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் படிக்க

  • அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் ‘புராஜெக்ட் -கே’ - மரண மாஸ் எண்ட்ரிக்கு ரெடி

அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் 'புராஜெக்ட் கே'-வின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் குறித்த புரோமோஷன் வீடியோ வெளியிடப்பட்டது.  நடிகையர் திலகம்  படத்தை இயக்கிய   நாக் அஸ்வின் இயக்கும்  இப்படத்தில்  பிரபாஸ் ஹீரோவாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட உச்சக்கட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சனை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புராஜெக்ட் கே படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் படிக்க

  • வெளியானது ரஜினியின் லால் சலாம் படத்தின் முக்கிய அப்டேட்..! விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன என்பதை, தயாரிப்பு நிறுவனமாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று விஷ்ணு விஷால் பிறந்தநாள் என்பதால் “எங்களது திருநாவுக்கரசருக்கு லால் சலாம் படத்தின் படக்குழு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் மேலும் நேர்மறை, உடல்நலம் மற்றும் மகிழ்ச்சிகள் கிடைக்கட்டும்” என லைகா நிறுவனம் பதிவு வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க

Continues below advertisement