மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்து திருவெண்காடில் அமைந்துள்ளது, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை சமேத  சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். 

Continues below advertisement

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத  பிறப்பு அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். 

Continues below advertisement

Aadi Amavasai 2023: திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பை அடுத்து சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர். மேலும் இன்று ஆடி அமாவாசை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண