அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் 'புராஜெக்ட் கே'-வின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் குறித்த புரோமோஷன் வீடியோ வெளியிடப்பட்டது. 


தமிழ் நடிகை சாவித்ரியின் கதையை நடிகையர் திலகம் என்ற பெயரில் இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் படம் புராஜெக்ட் கே. பாலிபலியை போஸ் பிரபாஸுக்கு மாஸ் காட்டும் இந்த படத்தில் கமல்ஹாசன், அபிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட உச்சக்கட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சனை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புராஜெக்ட் கே படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. 


மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'புராஜெக்ட் கே'-வின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெறும் காமிக்- கான் சர்வதேச நிகழ்ச்சியில் 'புராஜெக்ட் கே' படத்தின் தலைப்பு, டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அரிவிக்கப்பட உள்ளது. இதை கமல்ஹாசன், தீபிகா படுகோன், பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் காமிக்- கான் விழாவில் அறிவிக்க உள்ளனர். சர்வதேச காமிக்- கான் நிகழ்வில் பங்கு கொள்ளும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை 'புராஜெக்ட் கே' பெற்றுள்ளது.



இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் 'புராஜெக்ட் கே' குறித்த சிறிய வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. 15 நொடிகளே கொண்ட வீடியோவில் 'புராஜெக்ட் கே' ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் 20ம் தேதி வெளியாக உள்ளதாகவும், அன்று புராஜெக்ட் கே என்றால் என்ன என்பது தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புரோமோஷன் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய பெரிய பிரமாண்டத்தை கொண்டுள்ளதால் 'புராஜெக்ட் கே' இந்தியா மட்டுமின்றி, ஹாலிவுட் வட்டாரத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படும் 'புராஜெக்ட் கே' ரூ.400 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ் எதிர்பார்த்த வெற்றியை தராததால், 'புராஜெக்ட் கே' பிரபாஸுக்கு மாஸ் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.