வந்தாச்சு.. வந்தாச்சு.. டிசம்பரில் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம் - அப்டேட் கொடுத்த படக்குழு

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகி இருக்கும் ’மெரி கிறிஸ்துமஸ்’ படம் டிசம்பரில் ரிலீசாகும் என அறிவிப்பு

Continues below advertisement

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகி இருக்கும் ’மெரி கிறிஸ்துமஸ்’ படம் டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழில் முதன் முதலில் கத்ரீனா கைஃப் எண்ட்ரி கொடுக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். விஜய் சேதுபதி கூட்டணியில் நடிக்கும் இந்த படத்தை அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் துணை நடிகர்கள் பலர் இணைந்துள்ளனர். தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய்பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும், இந்தியில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களை தவிர அஸ்வினி கல்சேகர், ராதிகா ஆப்தே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருசில காரணங்களால் அது முடியாமல் போது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த திகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ப்ரீத்தர் இசையில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் தமிழ் மொழியில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். ஸ்ரீராம் ராகவன் முதன் முதலில் தமிழில் எடுக்கும் படம் என்பதாலும், தமிழ் திரையுலகிற்கு கத்ரீனா கைஃப் அறிமுகமாக உள்ளதாலும் மெரி கிறிஸ்துமஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தமிழில் மட்டுமே நடித்து கொண்டிருந்த விஜய் சேதுபதி சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கிலும், ஃபர்சி வெப் சீரிஸ் மூலம் இந்தியிலும் அறிமுகமானார். அமேசான் பிரைமில் வெளியான ஃபர்சி வெப் சீரிலில் விஜய்சேதுபதியின் நடிப்பு பேசப்பட்டதுடன், இந்தியில் பேசியும் அசத்தி இருந்தார். இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்கு முன்பாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகி இருந்தார். ஆனால், சில காரணங்களால் படம் தாமதமாக ரிலீசாக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola