Salaar Teaser Update: சலார் படத்திற்கான டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அதிகாலையிலேயே அலாரம் வைக்கனும் போலயே..!
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ மிகவும் வன்முறையான மனிதனான சலாருக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். வரும் வியாழனன்று காலை 5.12 மணியளவில் சலார் படத்தின் டீசர் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
முடிந்தது படப்பிடிப்பு: தீபாவளிக்கு வெளியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம்! தேதி அறிவிப்பு
ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜிகர்தண்டா. மேலும் படிக்க
யாருப்பா இது...? திருப்பதியில் சாமி தரிசனம்! மொட்டையுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்தது. மேலும் படிக்க
’போன படம் மிஸ் ஆகிடுச்சு... இந்த தடவை மிஸ் ஆகாது’ - எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்!
போன முறை மிஸ் ஆகிடுச்சு.. ஆனால், இந்த தடவை மிஸ் ஆகாது என மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனலாக பேசியுள்ளார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். இவர்களுக்கு வில்லனாக மிஷ்கினும், முக்கிய கதாபத்திரத்தில் சரிதாவும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
”ஒரே திரைப்படத்தின் மூலம் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.. ஒன்றிணைந்து பயணிப்போம்” - உதயநிதி ஸ்டாலின்
மாமன்னன் படத்தைப் பாராட்டி இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதில் ட்வீட் செய்துள்ளார். "திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார், அதைக் களைவதற்கான வேலையை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக தொடங்குவார் என்றும் படத்தைப் பாராட்டியும் இயக்குநர் பா.ரஞ்சித் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். மேலும் படிக்க
உன்மேல் நான் கொண்ட காதல்.. என்மேல் நீ கொண்ட காதல்.. ஜோதிகா, சூர்யா குடும்பத்தின் ஜாலி டூர்..
இளைஞர்களின் இதயத்துடிப்பாக அழகும், நேர்த்தியான நடிப்பும் சேர்ந்து திரையில் நட்சத்திரங்களாக மின்னியவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி. இவர்களில் அன்பான அழகான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல். இன்றும் இவர்களுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி, நட்பு ரசிகர்களை வசீகரிக்கிறது. மேலும் படிக்க