தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் வெளியான ஒரே நாளில் ட்விட்டர் பக்கத்தில் 100k லைக்குகளை குவித்து பெரிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் இந்தாண்டின் இறுத்திக்குள் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
திருப்பதியில் தனுஷ்
இந்நிலையில், உலக பிரசித்தி பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் தனுஷ். தனது இரண்டு மகன்களுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் வெளியே வந்த தனுஷை அவரது ரசிகர்களும், ஊடங்களும் வீடியோ பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
கேப்டன் மில்லர் படத்திற்காக தாடியும் மீசையுமாக இருக்கும் தனுஷ், கோயிலில் மொட்டை அடித்துள்ளார். மொட்டை அடித்ததால் தொப்பியையும் பெரிய ருத்ராட்ச மாலையையும் தனுஷ் கழுத்தில் காணமுடிகிறது. ஆன்மிக பயணம் சென்ற இவரது புது லுக்கை பார்த்த சிலர், “ இந்த எந்த படத்திற்கான லுக்காக இருக்கும்” என்றும் “ புஷ்பாவில் வரும் ஃபஹத் ஃபாசில் போல் உள்ளார்” என்றும் “தனது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக இப்படி செய்துள்ளார்” என்றும் அவரவர்களுக்கு தோன்றும் எண்ணங்களை கமெண்ட் செக்ஷனில் குவித்து வருகின்றனர்.
நிரம்பி வழியும் தனுஷின் கால்ஷீட்
கேப்டன் மில்லருக்கு பின்னர் தனுஷ், சேகர் கம்முலாவுடன் இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாம். சிலர் இவர் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைவார் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இது போதாதென்று இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகம் செய்த ராஞ்சனா இயக்குநர் ஆனந்த எல்.ராயுடன் மீண்டும் இணைந்து நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
ஜூலை பேபி தனுஷ்
இம்மாதத்தில் பிறந்த பிரபலங்களான ரன்வீர் சிங், எம்.எஸ்.தோனி, கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி ஆகியோரின் வரிசையில் ஜூலை மாதம் 28 ஆம் தேதியில் பிறந்தநாள் காண்கிறார் தனுஷ். இவரின் பிறந்தநாளையொட்டி பெரிய அப்டேட் நிச்சயமாக வெளியாகும் என நம்பப்படுகிறது.
மேலும் படிக்க : மாமன்னனாக 40 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!