இளைஞர்களின் இதயத்துடிப்பாக அழகும், நேர்த்தியான நடிப்பும் சேர்ந்து திரையில் நட்சத்திரங்களாக மின்னியவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி. இவர்களில் அன்பான அழகான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல். இன்றும் இவர்களுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி, நட்பு ரசிகர்களை வசீகரிக்கிறது. 


நடிகர் ஜோதிகா தனது கணவர் சூர்யா மற்றும் இரண்டு குழந்தைகளுன் டென்மார்க் சுற்றுலா சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.






 


சூர்யா ஜோதிகா


ஆரம்பத்தில் மொழி பிரச்சனையால் அதை கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு பின்னர் தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகை ஜோதிகா. ஜோதிகாவிற்கு தனது பணியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு, சக ஊழியர்களிடம் இருந்த பணிவு, வேலையில் அவர் காட்டிய நேர்மை இவற்றை ரசிக்க தொடங்கினார் சூர்யா.


இவர்களில் இரண்டாவது சந்திப்பிற்கு பிறகு இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறினார். நீண்ட நேரங்களுக்கு அவர்களின் உரையாடல்கள் தொடங்கின. பார்ட்டிகளுக்கு ஒன்றாக செல்ல தொடங்கினர். பின்னர் சூர்யாவின் 'நந்தா' திரைப்படத்தை பார்த்து இம்ப்ரெஸான ஜோதிகா தனது அடுத்த திரைப்படமான 'காக்க காக்க' திரைப்படத்தில் ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவை இயக்குனர் கௌதம் மேனனிடம் பரிந்துரைத்துள்ளார். 


அங்கே தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. காக்க காக்க படம் வெளியான சமயத்தில் சூர்யா - ஜோதிகா நிச்சயம் முடிந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருதரப்பு பெற்றோரின் சம்மதம் பெற முடியும் என நம்பினார். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சூர்யா - ஜோதிகா இருவருமே ஸ்டார் நடிகர்களாக முன்னேறினர். படத்தின் வெற்றியை போலவே இருவருக்கும் இடையில் இருந்த காதலும் வலுப்பெற்று கொண்டே இருந்தது.


கோலாகலமான திருமணம் :


2006ம் ஆண்டு சூர்யா - ஜோதிகா அழகான காதல் உறவு திருமணத்தில் முடிந்தது. செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக பிரபலங்களின் வருகையோடு கோலாகலமாக தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தின் படி சடங்கு சம்பிரதாயங்களுடன்  திருமணம் நடைபெற்றது.