வசூலில் சாதித்தாரா மாமன்னன்.. முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ!
மாமன்னன் திரைப்படம் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. நடிரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதுவே தன் திரைப்பயணத்தில் இறுதியான திரைப்படம் என அறிவித்துவிட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக மாமன்னன் திரைப்படம் இணையத்தில் பேசுபொருளானது. மேலும் படிக்க
குட்நைட் முதல் குலசாமி வரை...இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்..!
இந்த வாரம் டிஜிட்டல் தளங்களில் பல வெப் சீரிஸ் படங்கள் வெளியாக உள்ளன. நெட்ப்ளிக்ஸ், ஜீ 5 , அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் ஏராளமான புதிய தொடர்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன. எனவே இந்த வார இறுதியில் உங்களுக்கு பிடித்த படம் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வாரம் தமிழில் மட்டுமே மொத்தம் நான்கு படங்கள் வெளியாக உள்ளன. மேலும் படிக்க
சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்... பாராட்டும் விலங்கு நல ஆர்வலர்கள்!
வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த மேலும் ஒரு சிங்கத்தை நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன் மாவீரன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் என சிவகார்த்திகேயன் பிஸியாக வலம் வருகிறார். மேலும் படிக்க
'கடைசி வரை நிறைவேறாமல் போன உதயநிதியின் ஆசை’ .. சோகத்தில் ரசிகர்கள்...
தாத்தா கருணாநிதி, மகன் இன்பநிதி பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என பலரும் நடித்துள்ள மாமன்னன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. மேலும் படிக்க
மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி, தனபால் கதையா? - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..!
மாமன்னன் படம் முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை என சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
காமம் எந்த வகை... தமன்னா, மிருணாள் தாக்கூர் நடித்த ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ எப்படி இருக்கு?
பிரபல இந்தி இணைய தொடரான லஸ்ட் ஸ்டோரிஸின் அடுத்த பகுதி நேற்று (ஜூன்.29) வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ஆந்தாலஜி (4 பாகங்களைக் கொண்ட தொடர்) தொடராக லஸ்ட் ஸ்டோரிஸ் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் கொங்கனா சென், பால்கி, சுஜய் கோஷ், அமித் ஷர்மா ஆகிய நான்கு இயக்குநர்களும் இத்தொடரில் ஒரு எபிசோடை இயக்கியுள்ளனர். மேலும் படிக்க