பிரபல இந்தி இணைய தொடரான லஸ்ட் ஸ்டோரிஸின் அடுத்த பகுதி நேற்று (ஜூன்.29) வெளியாகியுள்ளது.


பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ஆந்தாலஜி (4 பாகங்களைக் கொண்ட தொடர்) தொடராக  லஸ்ட் ஸ்டோரிஸ் வெளியாகியுள்ளது.


இயக்குநர்கள் கொங்கனா சென், பால்கி, சுஜய் கோஷ், அமித் ஷர்மா ஆகிய நான்கு இயக்குநர்களும் இத்தொடரில் ஒரு எபிசோடை இயக்கியுள்ளனர். மேலும், தமன்னா, காஜோல், மிருணாள் தாக்கூர், அம்ருதா சுபாஷ், நீனா குப்தா, திலோத்தம்மா ஷோம், விஜய் வர்மா, அங்கத பேடி ஆகியோர் இத்தொடரில் நடித்துள்ளனர்.


புனித பிம்பங்களாக சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு, பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்களான பாலியல் உணர்வுகள், காமம், அது தொடர்பான சிக்கல்கள் இவற்றையெல்லாம் பற்றி ஜாலியாக பேசும் வகையில் இத்தொடர் அமைந்துள்ளது. கியாரா அத்வானி நடித்த இத்தொடரின் முதல் சீசனே பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.


இந்நிலையில் இரண்டாவது சீசனில் தமன்னா, மிருணாள் தாக்கூரின் போல்டான எபிசோட்கள் கடந்த இரண்டு வாரங்களாகவே இணையத்தில் பேசுபொருளாகி வைரலாகி வந்தன. குறிப்பாக தமன்னா தான் நடிக்க வந்த 17 ஆண்டுகளில் முதன்முறையாக தன் காதலர் விஜய் வர்மாவுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளது  சினிமா வட்டாரத்தில் டாக் ஆஃப் தா டவுனாக மாறியது


இவற்றுக்கிடையில் நேற்று வெளியாகியுள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் தொடர் எப்படி இருக்கிறது, நெட்டிசன்களின் உள்ளங்களைக் கவர்ந்ததா, என்ன சொல்கிறார்கள் இணையவாசிகள் எனப் பார்க்கலாம்!






“இந்தியாவில் காமம் எப்படி இருக்கிறது என்பதைக் காண்பித்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நம்மை வியப்படய வைக்கும். போல்டான, நேர்மையான பிரதிபலிப்பு.  நான்கு இயக்குநர்களும் மனித உறவுகளின் சொதப்பலான மற்றும் குழப்பமான பக்கத்தைக் காட்ட வெட்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.






“மிருணாள், தமன்னா, கஜோல் நடித்துள்ள் எபிசோட்கள் அதிருப்தி. தமன்னா - விஜய் வர்மா காதல் காட்சிகள் செயற்கையாக உள்ளன. இரண்டாவது எபிசோடை மட்டும் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.






“லஸ்ட் ஸ்டோரிஸ் 4ஆவது கதை சிறப்பு. கஜோலின் நடிப்பு பிரமாதம். அவரது மொத்த அனுபவமும் அவரது முகத்தில் தெரிகிறது. கஜோல் ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் ட்விஸ்ட் உள்ளது” எனக் கூறியுள்ளார்.






“இத்தொடரில், கொங்கனா சென் மட்டும் தான் நம்மை கரை சேர்க்கிறார். தமன்னா - விஜய் வர்மா அதிருப்தி” எனக் கூறியுள்ளார்.