இந்த வாரம் டிஜிட்டல் தளங்களில் பல வெப் சீரிஸ் படங்கள் வெளியாக உள்ளன. நெட்ப்ளிக்ஸ், ஜீ 5 , அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் ஏராளமான புதிய தொடர்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.  எனவே இந்த வார இறுதியில் உங்களுக்கு பிடித்த படம் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வாரம் தமிழில் மட்டுமே மொத்தம் நாண்கு படங்கள் வெளியாக உள்ளன.


வீரன்


அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வீரன். ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து மரகத நாணையம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ளார். படத்திற்கான இசையை ஹிப்ஹாப் தமிழாவே செய்துள்ளார். வீரன் திரைப்படம் வரும் ஜூன் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது என பிரைமின் ட்விட்டர் கணக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குட் நைட்


விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம் குட் நைட். மணிகண்டன் ரமேஷ் திலக் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். கடந்த மே 12 ஆம் தேது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றது குட் நைட் திரைப்படம். தற்போது வரும் ஜூலை 3 ஆம் தேதியன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது குட் நைட்.


குலசாமி


விமல் நடித்த குலசாமி திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  நடிகர் விமல் நடிப்பில் உருவான படம் “குலசாமி”. இந்த படத்தை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவரும்,  தண்டாயுதபாணி, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சரவண சக்தி  இயக்கியுள்ளார். குலசாமி படத்தில் ஹீரோயினாக  தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், வினோதினி, மகாநதி ஷங்கர்,கர்ணராஜா, முத்துப்பாண்டி, ஜெயசூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  குலசாமி படம் மிகக் குரைந்த நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி டெண்ட்டுகொட்டா வில் வெளியாகி இருக்கிறது.


விமானம்


தன் மகனின் ஆசையை நிறைவேற்ற மாற்றுத்திறனாளி ஏழை அப்பாவான சமுத்திரக்கனி, எந்த எல்லை வரை செல்கிறார், அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கதை. இயக்குநர் சிவ ப்ரசாத் யானலா இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விமானம். வரும் ஜூன் 30 ஆம் தேதி ஜீ5 இல் வெளியாக இருக்கிறது இந்தப் படம்.