வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த மேலும் ஒரு சிங்கத்தை நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


3 வயது சிங்கம்


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன் மாவீரன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து நடிகர் கம்ல்ஹாசனின் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் என சிவகார்த்திகேயன் பிஸியாக வலம் வருகிறார்.


இதனிடையே வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


‘ஷேர் - யார்’ எனும் பெயர் கொண்ட மூன்று வயதான  சிங்கத்தை ஆறு மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன் என்றும், சிங்கத்தின் அன்றாட பராமரிப்பு செலவுகளுக்கு இது வரமாக இருக்கும், பயனளிக்கும் என்றும் இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிறுவனம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. 


பூங்கா நிர்வாகம் மகிழ்ச்சி


மேலும், வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவில் எந்த ஒரு தனி நபரும் எந்த ஒரு மிருகத்தையும் தத்தெடுத்து, அதன் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை கவனித்துக்கொள்ளலாம் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.






இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த செயல் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் இணையத்திலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


வரிசைகட்டும் படங்கள்


சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கான பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். சாய் பல்லவி இவருக்கு இப்படத்தில் முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் நிலையில், இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.  மற்றொருபுறம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக தன் அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் பகிர்ந்த உருக்கமான பதிவு நெட்டிசன்களின் இதயங்களை வென்றது.


காவல்துறை அதிகாரியான தன் அப்பா தாஸ் எப்படி சிறைவாசிகளின் படிப்புக்கு உதவுவார், சிறைவாசிகளிடம் எப்படி கனிவுடன் நடந்து கொள்வார் என்பது குறித்து, தன் அப்பாவிடம் உதவி பெற்ற ஒருவர் அது பற்றி தன்னிடம் பகிர்ந்தது குறித்தும் சிவகார்த்தியேன் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.


மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.