தேவர்மகன் விமர்சன விவகாரம்; 'என்னால் நடிக்க முடியாது..' இயக்குனர் மாரி செல்வராஜ்..!
மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். ‘தேவர் மகன்’ படம் சரியா? தவறா? என்று சொல்லத் தெரியாமல் பெரிய வலியை கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் படிக்க
வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸ்.. கொடூர வில்லனாகக் கலக்கிய டேனியல் பாலாஜி வாழ்த்து!
கோலிவுட்டின் உச்சநட்சத்திரம் கமல்ஹாசன் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாகக் கைக்கோர்த்த நிலையில், தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக வேட்டையாடு விளையாடு உருவெடுத்தது. மேலும் படிக்க
‘போதைப் பொருள் பழகாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள்’ - இளைஞர்களிடம் நடிகர் கார்த்தி கோரிக்கை!
தமிழ்நாடு காவல் துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். தொடர்ந்து இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது: ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. மேலும் படிக்க
ஒரே நாள்..! பறிபோன இரு குடும்ப உயிர்கள்.. உடன் பிறந்தவர்களை இழந்து துடித்த நடிகர் போஸ் வெங்கட்!
இயக்குநரும், சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னிமாடம் படத்தின் இயக்குநரும், சின்னத்திரை நடிகருமான போஸ் வெங்கட், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இவர் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ்..? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்துக்காக நடிகர் பிரபாஸ் உடன் கைக்கோர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவை இலக்காகக் கொண்டு தன் வங்கிப் பணியை உதறிவிட்டு கோலிவுட்டில் மாநகரம் படம் மூலம் கால் பதித்த லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்களை கவனிக்க வைத்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து கார்த்தியின் கைதி மூலம் இரண்டாவது படத்திலும் மாஸ் காண்பித்த லோகேஷை கோலிவுட் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் படிக்க
'காலத்தால் மறைக்க முடியாத காவியம் அந்த படம்' மாரி செல்வராஜை வம்புக்கு இழுக்கிறாரா மோகன் ஜி..?
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற, தென் மாவட்டத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றிய திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பரியேறும் பெருமாள் திரைப்படம் கோவா திரைப்படவிழாவில் சிறந்த திரப்படத்திற்கான விருதினைப் பெற்றது. மேலும் படிக்க