Dhanush Next Movie: மீண்டும் பாலிவுட் செல்லும் தனுஷ்... ராஞ்சனா இயக்குனருடன் கூட்டணி..! படத்தின் பெயர் என்ன தெரியுமா..?
தனுஷ் அடுத்ததாக இந்தி படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் பெயர் தேரி இஷ்க் மெயின் ஆகும். ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை ஹிமான்சு சர்மா தயாரிக்கிறார்.
Manju warrier: மிஸ்டர் எக்ஸ் படத்தில் இணைந்த துணிவு பட நடிகை... வெளியான அசத்தல் அப்டேட்
அசுரன், துணிவு படங்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சு வாரியர். இவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் இணைந்துள்ளார். ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.
Manju warrier: மிஸ்டர் எக்ஸ் படத்தில் இணைந்த துணிவு பட நடிகை... வெளியான அசத்தல் அப்டேட்
படப்பிடிப்பின் போது விபத்து... மாநாடு பட நடிகைக்கு காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி...
‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கடந்த மே மாதம் தொடங்கிய இந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெற்றுள்ளார். இதற்காக சண்டை காட்சிகளில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி, படத்துக்காக சமீபத்தில் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் அந்த காட்சிகளில் நடித்தார். அப்போது அவருக்கு கையில் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சண்டைக் காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது விபத்து... மாநாடு பட நடிகைக்கு காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி...
Rachitha Mahalakshmi : ஆபாச மெசேஜ்... மிரட்டும் கணவர்.. நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு வந்த ரச்சிதா மஹாலட்சுமி..
நேற்று திடீர் என ரட்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் ரட்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரச்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரச்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Mamannan: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் இயக்குநர் மாரி செல்வராஜ் கமலுக்கு எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல்
மாரி செல்வராஜ் கமல்ஹாசனுக்கு எழுதிய விமர்சனக் கடிதமும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில் தேவர்மகன் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசிய அவரது படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை குறிப்பிடுள்ளார் மாரி செல்வராஜ். போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே என்கிற பாடல் தலித் மக்களை எத்தகைய ஒடுக்குமுறைக்கு உள்ளாகியது என்பதை விவரித்துள்ளார் மாரி செல்வராஜ்.
தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தேவர் மகன் மாதிரியான ஒரு படத்தை கமல் எடுத்தது பணத்திற்காகவா என்கிற கேள்வியை முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ். மேலும் உலகநாயகன் என்று அனைவரும் கொண்டாடும் கமல்ஹாசனின் திரைப்பணிகளில் தனது ஒட்டுமொத்த விமர்சனத்தையும் மிக கடுமையான மொழியில் முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.