அசுரன், துணிவு படங்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சு வாரியர். இவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் இணைந்துள்ளார். ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் துவக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது.






இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சவாலான வேடத்தை  ஏற்றிருக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. பொழுதுபோக்கு கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை ‘எப்ஐஆர்’ புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லஷ்மன்குமார் இந்தப்படத்தை உயர்ந்த தொழிநுட்ப தரத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார். 


மிஸ்டர் எக்ஸ்  படத்திற்காக இந்தியா, அசர்பைஜான் மற்றும் ஜாரிஜியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும் அதிரடி சண்டை காட்சிகளை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா வடிவமைக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைப்பில் உருவாகும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை தன்வீர் மிர் கவனிக்க, படத்தொகுப்பை பிரசன்னா GK மேற்கொள்ள இருக்கிறார்.


தயாரிப்பு வடிவமைப்பை ராஜீவனும் கலையை இந்துலால் கவீத்தும் ஆடை வடிவமைப்பை AP.உத்தரா மேனனும் கவனிக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகியாக பால்பாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக ஷ்ராவந்தி சாய்நாந்த்தும் பொறுப்பேற்றுள்ளனர். இந்தப்படத்தின் இணை தயாரிப்பாளராக A.வெங்கடேஷ் இணைந்துள்ளார்.


மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க 


Tasmac Closed: நாளை எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? முழு விவரம் உள்ளே..!


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு.. உடல்நிலை குறித்து மருத்துவமனை சொல்வது என்ன?