தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது. இந்த சீரியல் பல சீசனாக ஒளிபரப்பாகி வந்து கொண்டிருந்தது. ஒரு சீசன் நடித்து ரசித்தா மகாலட்சுமி பிரபலமானார். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில், உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.



கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் ரிலீஸ்கள் பதிவு செய்து ரசிகர்களுடன் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்று திடீர் என ரட்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தான் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் ரட்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என தெரிவித்து விட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரச்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரச்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை ஒருவர் நள்ளிரவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு, ஆஜராகி விட்டு சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது