நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. FLC Counsellors மற்றும் FLC Directors ஆகிய பணிகளுக்கு JMGS-1, MMGS -II, MMGS-III ஆகிய கிரேட்களின் கீழ் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணபிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ.வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
பணி விவரம்:
FLC Counsellors - 182
FLC Directors -12
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் / எஸ்.பி.ஐ. வங்கியில் பணிபுரிந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட கல்வி தகுதி ஏதும் தேவையில்லை.
சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். திறம்பட வேலை செய்ய வேண்டும்.
மேலே குறிப்ப்பிட்டுள்ள பணிகளுக்கு தேவையான சிறப்பு திறன்களை கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி இடம்:
’Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai’ - அலுவலகத்தில் இந்த வேலைக்கு தேர்ந்தெடுப்பவர்கள் பணியமர்த்தப்படுவர்.
இரண்டு பதவிகளுக்கான பணியிட விவரம் குறித்து அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.06.2023 -ன் படி 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 60 வயது பூர்த்தியந்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
1-JMGS-I - ரூ. 35,000/-
2 -MMGS-II - ரூ. 40,000/-
3 -MMGS-III ரூ. 40,000/-
4 -SMGS-IV ரூ. 45,000/-
5 - SMGS-V ரூ. 60,000/-
பணிகாலம்:
இதற்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ஓராண்டு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் காலமாகும். இரண்டு ஆண்டு ஒப்பந்த காலமாகும். பணி திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
நிரந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும்.
கவனிக்க:
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து வங்கி வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை அறியலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2023
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/36548767/150620231114-ADVT+FLC.pdf/bbab2e95-3c77-f822-58c1-83649ad02a64?t=1686809072151 - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/s/abpnaduofficial