மனிதநேயமிக்க விஜயகாந்துக்கு அஞ்சலி.. நாளை படப்பிடிப்பு முழுவதும் ரத்து என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!


நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (Vijayakanth) மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். திரைப்படத் தயாரிப்பாளர்களை " முதலாளி" என அன்போடு அழைத்தவர். மேலும் படிக்க


தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு.. கதறும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள்


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  நடிகை த்ரிஷா வெளியிட்ட பதிவில், “கேப்டன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது இரக்க குணத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். பிரேமலதா மேடம் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் படிக்க


ரைஸ் மில்லில் நண்பர்களுடன் வேலை பார்த்து மகிழ்ந்திருக்கும் விஜயகாந்த்.. வைரலாகும் வீடியோ!


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் அரசியல் களத்திலும் திரையுலகிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக  பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது மறைவை அனுசரிக்கும் வகையில் இன்று திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


சகாப்தம் முடிந்தது; கண்ணீர் சிந்துவதைத் தவிர வழியில்லை.. விஜயகாந்துக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல்!


இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்தை ஆரத் தழுவி கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என நினைத்தேன் என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமாக கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தேமுதிக கட்சி தலைவர்  விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சி தொண்டர்களும், அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க


நிறுத்தப்பட்ட வேட்டையன் ஷூட்டிங்.. வைரலாகும் ரஜினிகாந்த் - ஃபகத் ஃபாசில் புகைப்படம்!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக 600 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. தென்னிந்திய திரையுலகின் ஸ்டார் நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் படிக்க


”நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை” - 20 ஆண்டு நினைவை பகிர்ந்த நயன்தாரா


திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள  நயன்தாரா தனது ரசிகர்களால் தான் எல்லாமே நடந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  மலையாளத்தில் வெளிவந்த மனசினகாரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான  நயன்தாரா, 2005 ம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் நடித்தார். மேலும் படிக்க