நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக 600 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. தென்னிந்திய திரையுலகின் ஸ்டார் நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றனர். 


வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் :


'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'. நடிகர் சூர்யா நடிப்பில் பழங்குடியின மக்களின் வாழ்வியலை வைத்து அழுத்தமான ஒரு திரைக்கதையை 'ஜெய்பீம்' படம் மூலம் கொடுத்த த.செ. ஞானவேல், தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 'வேட்டையன்' படத்தை இயக்குகிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. 


 



கசிந்த வீடியோ மற்றும் புகைப்படம் :


வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் மிகவும் மும்மரமாக ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 


மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு :


கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஒட்டுமொத்த நகரமே துண்டிக்கப்பட்டது. தற்போது தான் தூத்துக்குடி நகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதனால் மீண்டும் தூத்துக்குடியில் படப்பிடிப்பை தொடங்கிவிட்டது 'வேட்டையன்' படக்குழு.   


ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துடன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்  இணையவுள்ளார். மேலும் இப்படத்தில் ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 


தலைவர் 170 :


லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ரஜினிகாந்தின் 170வது படமான 'வேட்டையன்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


 



விஜயகாந்துக்கு அஞ்சலி :


இந்த நிலையில் இன்று காலை நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமான செய்தி வெளியானதும் நாகர்கோயிலில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அவருக்கு அஞ்சலி செய்வதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். விஜயகாந்த் - ரஜினிகாந்த் இடையே நட்பு என்பது 80களில் இருந்து தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.