கேப்டன் விஜயகாந்த்


தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்த் இறப்பிற்கு இந்திய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய நிறத்தை காரணமாக வைத்து எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினி கமல்ஹாசன் திரையுலகில் ஆதிக்க செலுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் அவர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் விஜயகாந்தின் பல்வேறு செயற்பாடுகள் மக்களிடத்தில் ஆதரவைப் பெற்றன. 1999இல் கடனில் மூழ்கிவந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று மீட்டார். தமிழ்நாட்டில் இன்றுவரை விஜயகாந்த்தினால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எப்படியும் குறைந்த பட்சம் ஊருக்கு ஒரு குடும்பமாவது இருக்கும். 


அரசியல் களத்தில் 


 தான் பிறந்த மதுரை மண்ணில் 2005 ஆம் ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த்.  அவரது  முழக்கங்களில் மிகவும் முக்கியமானது “ இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்பது.  கட்சி தொடங்கிய ஒரு சில மாதங்களில்  பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி  பிரச்சாரம் செய்தார். முதல் தேர்தலில் 8 சதவீததிற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது மட்டும் இல்லாமல், ஒற்றை தேமுதிகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்குள் நுழைந்தார். 


பா. ரஞ்சித் இரங்கல்


கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தொடங்க இருந்த மார்கழியில்_மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. ”கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு கலைஞர்களுக்கும் திரைத்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. எளிய மக்களின் நம்பிக்கையாக, விளிம்புநிலை கலைஞர்களின் விடிவெள்ளியாக எக்காலத்திற்கும் இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இழப்பு தமிழ் மக்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


அதில் பங்கெடுக்கும் பொருட்டு இன்று நடைபெறவிருந்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை’ முதல்நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”  என்று நீலம் பண்பாட்டு மையம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.