Nayanthara: திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நயன்தாரா தனது ரசிகர்களால் தான் எல்லாமே நடந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மலையாளத்தில் வெளிவந்த மனசினகாரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, 2005 ம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் நடித்தார். தொடக்கத்திலேயே சரத்குமார், ரஜினி உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் நடித்த நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்
குவிந்தன.
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த நயன்தாரா 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு நயன்தாரா தாயானர்.
ஹீரோக்களுடன் நடித்து வந்த நயன்தாரா அறம் படத்தின் மூலம் தனித்துவமான கேரக்டரில் நடித்தனர். தொடர்ந்து, கோலமாவு கோகிலா, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அண்மையில் முதல்முறையாக இந்தியில் அறிமுகமான நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்த நயன்தாரா, தனது 75வது படமாக அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். இதிலும் பெண்ணை முன்னிலைப்படுத்திய படமாக உள்ளது.
சினிமா மட்டுமில்லாமல் தனியே தொழில் துறையிலும் கலக்கி வரும் நயன்தாரா, தன் பெயரில் நிறுவனங்களை தொடங்கி அதில் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, எல்லாமே தனது ரசிகர்களால் தான் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், ”நான் கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் தான் காரணம். என்னுடைய கெரியரில் நான் சோர்ந்து விழும்போது எல்லாம், மீண்டும் எழுந்து வர எனது இதயத்துடிப்பாக ரசிகர்களாகிய நீங்கள் உன்னர்.
நீங்கள் இல்லை என்றால் எனது இந்த பயணம் முழுமை அடைந்து இருக்காது. எனக்கு அருக்கிலும், தூரத்திலும் இருக்கும் ரசிகர்களாகிய நீங்கள் எப்பொழுதும் எனது ஸ்பெஷல் தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடுவதற்கு நீங்கள் தான் காரணம்” என கூறியுள்ளார்.