அரசுப் பள்ளியை தத்தெடுத்த ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி.. நெகிழ்ச்சியில் சொந்த ஊர் மக்கள்!


கடந்த 2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பான் இந்திய அளவில் வெற்றிபெற்று 400 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன. இப்படியான நிலையில் தனது சொந்த ஊரான கேரடியில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி. மேலும் படிக்க


‘துருவ நட்சத்திரம்’ வரிசையில் தள்ளிப்போகும் ‘தங்கலான்’? கடும் அதிருப்தியில் விக்ரம் ரசிகர்கள்!


பா.ரஞ்சித் - விக்ரம் முதன்முறையாகக் கூட்டணி வைத்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்ட முறையில் தயாராகி உள்ளது. நடிகர் பசுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க


தளபதி 68 டைட்டில் "பாஸ்" ஆ? " பஸ்ஸல்"ஆ? அப்டேட் தந்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தாய்லாந்து, சென்னை, உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மினாக்‌ஷி செளத்ரி, மோகன், வைபவ், பிரேம் ஜீ அமரன் உள்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மேலும் படிக்க


”நான் யாருன்னு நிரூபிக்க வேண்டியது இல்ல” - மீட்பு பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு மாரி பதிலடி..!


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்ற தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பையும் தாண்டி அதீத கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பாய்ந்தது. மேலும் படிக்க


பச்சிளம் குழந்தை கண்கள்.. வசீகரத்தின் மறுபெயர்.. அசைக்க முடியாத க்ரஷ்.. நஸ்ரியா பிறந்தநாள்!


அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். மிக அழகான பாவனைகள், இப்போது தான் தூக்கத்தில் இருந்து விளித்த குழந்தையின் பச்சிளம் கண்கள். சிறிய மேலிதழ்களின் குறையை மறைக்க கீழ் இதழ்கள் சற்று எடுப்பாக காட்டும் அழகை ஒவ்வொரு இளைஞரும் ரகசியமாக ரசிக்கத் தொடங்கினார்கள். மேலும் படிக்க


கிரிமினலிடம் பயிற்சி எடுத்துட்டு தான் பிக்பாஸ் போகணும்.. கூல் சுரேஷ் சுளீர் பேட்டி!


”பிக்பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று பேர் தான் உண்மையாக இருக்கிறார்கள். விஷ்ணு உண்மையாக தான் நடந்து கொள்வார். அதேபோல, தினேஷ் நேர்மையா இருப்பார். மேலும், மணியும் அவரோட வேலையை தான் பார்ப்பார். தான் உண்டு, தான் வேலை என்று இருக்கிறார். மற்றவர்களிடம் உண்மையில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லணும் என்று நினைத்தால், கிரிமினல், கொள்ளை கூட்டம் தலைவன், போலீசார் இவர்களிடம் எல்லாம் பயிற்சி எடுத்து தான் செல்ல வேண்டும். மேலும் படிக்க