தளபதி 68
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக தாய்லாந்து, சென்னை, உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மினாக்ஷி செளத்ரி, மோகன், வைபவ், பிரேம் ஜீ அமரன் உள்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
டபுள் ரோலில் விஜய்
இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இளம் விஜய்யின் கதாபாத்திரத்திற்காக நடிகர் விஜய்க்கு டீ ஏஜீங் தொழில்நுட்பம் பயன்படுத்த இருக்கிறது படக்குழு. நீண்ட நாட்கள் கழித்து திரையில் தோன்ற இருக்கும் நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் , பிரசாந்த், பிரபுதேவா ஆகிய மூவரும் இணைந்து நடனம் ஆடும் பாடல் காட்சி ஒன்றும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டைட்டில் என்ன
தளபதி 68 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று பல்வேறு யூகங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இந்தப் படத்திற்கு பஸ்ஸல் என்றும், பாஸ் என்றும் டைட்டில் வைக்கப் பட்டிருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் பரவியது தொடர்ந்து அனைத்து தளங்களிலும் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த யூகங்களை மறுத்து விளக்கமளித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட ட்வீட்டில் இப்படி குறிப்பிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி “ இணையதளத்தில் பரவும் எல்லா அப்டேட்களையும் பார்த்தேன். உங்கள் அன்பிற்கு நன்றி . ஆனால் உண்மையான அப்டேட்களுக்கு இன்னும் கொஞ்ச காலம் காத்திருங்கள் . இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஸ்பெஷலான வேலை செய்து வைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் பஸ்ஸ்ல் அல்லது பாஸ் கிடையாது. அனைவருக்கு காலை வணக்கம்”