ரிஷப் ஷெட்டி


கடந்த 2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பான் இந்திய அளவில் வெற்றிபெற்று 400 கோடி வரை வசூல் செய்தது. தொன்ம கதையை மையப்படுத்தி எடுக்கப் பட்ட இந்தப் படம் நவீன சினிமாவில் குறிப்பாக கன்னட சினிமாவில் குறிப்பிடத் தகுந்த ஒரு இடத்தை பிடித்துள்ளது. வசூல் ரீதியாக கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக அதிக வசூல் ஈட்டிய படம் காந்தாரா. நடிகர் , இயக்குநர் என பன்முகத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் ஷெட்டி சமூக செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வருபவர்.


தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன. இப்படியான நிலையில் தனது சொந்த ஊரான கேரடியில் இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளா நடிகர் ரிஷப் ஷெட்டி. ரிஷப் ஷெட்டியின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.