பட்டையைக் கிளப்பும் ஷாருக்கின் ' டங்கி' முன்பதிவு


2023ம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. 'பதான்', 'ஜவான்' என இரு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த ஷாருக்கான், ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடும் விதமாக வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ளது 'டங்கி' திரைப்படம். முன்னாபாய் தொடர், 3 இடியட்ஸ், பிகே, மற்றும் சஞ்சு போன்ற வெற்றிப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் ஜோடி சேர்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் 'டங்கி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், பொமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் வாசிக்க..


தளபதி 68 படத்தின் தலைப்பு 


நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு 'சி.எஸ் .கே' என்று டைட்டில் வைக்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கு 'பாஸ்' என்று டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாகவும், வரும் புத்தாண்டில் இந்தத் தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எப்போது வெங்கட் பிரபுவின் படங்களின் டைட்டில் என்றால் அவை ரசிகர்களிடம் சிறப்பு கவனம் ஈர்க்கும். அந்த வகையில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் வாசிக்க..


அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா 


அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 3 ஆம் தேதி என தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சினிமாவையும், இந்திய மக்களையும் என்றைக்கும் பிரித்து பார்க்கவே முடியாது. இங்கு பல மொழி மக்கள் வாழ்ந்தாலும், பிற மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் திரைப்படங்களை கொண்டாடுபவர்கள் அதிகம். அந்த வகையில் வாரம் தோறும் ரிலீசாகும் படங்களை தவிர்த்து திரைப்பட விழாக்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுபவர்கள். காரணம் இங்கு அதிகமாக உலக அளவில் வெளியான அல்லது உருவான திரைப்படங்கள் திரையிடப்படும்.மேலும் வாசிக்க..


பேய்க்கதையில் அழகான சித்திரம் வரைந்த மிஷ்கின்


தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், விறுவிறுப்பான இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பிசாசு'. இந்த மிரட்டலான படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.மிரள வைக்கும் காட்சிகள், ராட்ச பேய்கள், கொடூரமான முகங்கள் என ஒரு பேய் படத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் இல்லாமல் மிகவும் எளிமையான ஒரு திரைக்கதைக்கு தன்னுடைய கேமரா மூலம் உயிர் கொடுத்து அழகாக மிரட்டி இருந்தார் இயக்குநர் மிஷ்கின். மேலும் வாசிக்க..


வெள்ள மீட்பு பணியில் இயக்குநர் மாரி செல்வராஜ்


தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு வருவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. மேலும் வாசிக்க..


 சந்தோஷக் கண்ணீர்.. மறக்க முடியாத நாள். கணவர் ரெடின் கிங்ஸ்லி பற்றி உருக்கமாகப் பதிவிட்ட சங்கீதா!


இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. இந்நிலையில் தற்போது சங்கீதா தன் கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் என்னுடைய மறக்க முடியாத நாள் ஏராளமானோரின் வாழ்த்துக்களுடனும், ஆனந்த கண்ணீருடனும் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..