பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை சங்கீதா முதன் முதலில் மராத்தி மொழியில் தான் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இந்தியில் சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் இவர் நடித்தார். தற்போது சின்னத்திரை நடிகையாக மாறி உள்ள சங்கீதா, சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் அரண்மனைக்கிளி, திருமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ஆனந்த ராகம்' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. இந்நிலையில் தற்போது சங்கீதா தன் கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் என்னுடைய மறக்க முடியாத நாள் ஏராளமானோரின் வாழ்த்துக்களுடனும், ஆனந்த கண்ணீருடனும் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியானதும் ஏராளமான ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், நெட்டிசன்கள் சிலர் இது இந்த ஜோடிக்கு முதல் திருமணமா எனக் கேள்வி எழுப்பினர். சங்கீதாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.