• CM Stalin Letter: ”தென்மாவட்ட மீட்பு பணிகளுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம்


வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அதிக ஹெலிகாப்டர்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. மேலும் படிக்க



  • CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்


டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “பிரதமர் மோடியை சந்திக்க இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பான முழு விவரங்களையும் பிரதமரிடம் வழங்குவேன். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் உருவாக்க, உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் நிதி வழங்கிட பிரதமரிடம் கோர இருக்கிறேன். மேலும் படிக்க



  • Teachers Dress Code: பெண் ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கள் விருப்பப்படி ஆடை அணியலாம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு


பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி, புடவையோ அல்லது சுடிதாரோ அணியலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் புடவை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கின்றனர். மேலும் படிக்க



  • CM Stalin Delhi: ”நாளை தூத்துக்குடி,நெல்லை, செல்கிறேன்.. கணிப்பை விட அதிக மழை” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ம் தேதி புயலும், அதன் காரணமாக ஒருநாள் முழுக்க கடுமையான மழையும் பெய்தது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பெருமளவில் சேதம் தடுக்கப்பட்டது.  க்கள் பேரபத்திலிருந்து காக்கப்பட்டார்கள். இதனை ஒன்றிய அரசின் குழுவும் உறுதி செய்து, மாநில அரசை பாராட்டியது. மழை நின்றதுமே நிவாரணப் பணிகளை தொடங்கினோம். மேலும் படிக்க



  • TN Rain Alert: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்களுக்கு அறிவுறுத்தல்..


நேற்று குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி யானது இன்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க