தளபதி 68


லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கும் நிலையில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ஜெயராம், விடிவி கணேஷ், லைலா, அஜ்மல் அமீர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோயினாக விஜய் ஆண்டனியுடன் கொலை படத்தில் நடித்த மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.






டபுள் ரோலில் கலக்கும் விஜய்


முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, துருக்கி மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது இந்தப் படத்தை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் , பிரபுதேவா, பிரஷாந்த் ஆகிய மூவரும் இணைந்துள்ள பாடல் ஒன்று முதல் கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் , இளம் விஜய் கதாபாத்திரத்திற்காக நடிகர் விஜய்க்கு டீஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் வயதை குறைத்து காட்ட இருப்பதாகவும்  கூறப்பட்டது.


விஜய்யுடன் இணைந்த மற்றொரு நடிகை


ஏற்கனவே சினேகா, மீனாக்‌ஷி செளதரி உள்ளிட்ட நடிகைகள் இப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யுடன் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். தமிழில் வெளியான காபி வித் காதல் படத்தில் நடித்த நடிகை மாளவிகா சர்மா இப்படத்தில் விஜயுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன்.


படத்தின் டைட்டில்!


முன்னதாக இந்தப் படத்திற்கு 'சி.எஸ் .கே' என்று டைட்டில் வைக்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கு 'பாஸ்' என்று டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாகவும், வரும் புத்தாண்டில் இந்தத் தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எப்போது வெங்கட் பிரபுவின் படங்களின் டைட்டில் என்றால் அவை ரசிகர்களிடம் சிறப்பு கவனம் ஈர்க்கும். அந்த வகையில் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.