Entertainment Headlines: நன்றி கூறிய சித்தார்த்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்.. சினிமா ரவுண்டப் இதோ!

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 13ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Continues below advertisement

Rajinikanth: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதலமைச்சர் .. நன்றி தெரிவித்த ரஜினி

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரஜினியின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் படிக்க

Continues below advertisement

Ayalaan: அயலானுக்கு சித்தார்த் குரல்.. ஆனா 2011லயே சித்தார்த்துக்கு குரல் கொடுத்த சிவா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் அயலான் (Ayalaan). வேற்றுகிரக வாசி - சைன்ஸ் ஃபிக்சன் கதை என சுவாரஸ்யமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் உள்ள ஏலியன் கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

Lokesh Kanagaraj: LCUவின் தொடக்கம்.. 10 நிமிட ஷார்ட் பிலிம்.. லோகேஷ் ரசிகர்களுக்கு நரேன் தந்த இன்ப அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஆறே படங்களின் மூலம் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஒரு இளைஞனாக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இன்றைய இளைஞர்களின் மத்தியில் சென்சேஷனல் இயக்குநராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் தனது படங்களை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பாணியில் இயக்கி வருவது அவரின் ஸ்பெஷலிட்டி. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்து வருகிறது. இந்த LCU ட்ரெண்ட் குறித்து சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார் LCUவில் ஒரு அங்கமான நடிகர் நரேன். மேலும் படிக்க

Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் 7-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளதால் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடக்காததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

Bigg Boss 7: விதிமுறைகளை மதிக்கல.. பிக்பாஸையே புலம்ப வைத்த சீசன்.. பூர்ணிமா மாயா இடையே வெடித்த மோதல்!

பிக்பாஸ் (Bigg Boss) வீட்டில் இன்றை எபிசோடில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெறுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டாஸ்க் தொடங்கி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கரன்சி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டியாளர்களின் பெர்ஃபாமன்ஸூக்கு ஏற்ப, கரன்சி அவர்களுக்குள் கைமாற்றமாகி இறுதியில் அதிகம் சம்பாதித்தவர்கள் சுற்றின் சிறந்த போட்டியாளர்களாக தேர்வாவார்கள். இந்நிலையில், இந்த டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் இதே போன்று அனைவருக்கும் கரன்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

 

Continues below advertisement