தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரஜினியின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
மேலும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு வாசலில் அவரை காண ரசிகர்கள் கூடினர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் பல்வேறு வேடங்களை அணிந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல குவிந்தனர். ஆனால் ரஜினி வீட்டில் இல்லாததால் அவர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லால் சலாம், தலைவர் 170 படத்தின் டைட்டில் டீசர் எல்லாம் வெளியிட்டப்பட்டது.
இப்படியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இன்னொரு அறிக்கையில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு.0.பன்னீர் செல்வம், திரு.அண்ணாமலை, திரு.சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும். நண்பர் திரு.கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன், திரு.ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்., திரு.சச்சின் டெண்டுல்கர் திரு, சுரேஷ் ரெய்னா, திரு.ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும். அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
உழைப்பு: "பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்
உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என தெரிவித்துள்ளார்.