தமிழ் சின்னத்திரையில் ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சர்வீஸ் விட்டிருந்த காரை எடுக்க சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, யாரோ ஒருவர் அருணாசலத்தின் போனை கொள்ளையடித்துக் கொண்டு ஓட அருணாச்சலம், அவருடன் இருந்த மூன்று பேரும் துரத்திச் செல்கின்றனர். ஒரு இடத்தில் போய் ஒளியும் அந்த நபர் கார்த்திக்கு போன் செய்து “இங்க ஒரு பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறார், அவருடைய போனில் உங்க நம்பர் இருந்தது” என சொல்லி பேச, கார்த்திக் அப்பாவுக்கு ஆபத்து என நினைத்து கிளம்பி செல்கிறான். 


வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க, அபிராமி கார்த்திக் குறித்து விசாரிக்க, ஐஸ்வர்யா “வேலை விஷயமாக போய் இருப்பாரு” என்று சமாளிக்க முயற்சிக்க, அருண் கார்த்திக்கு போன் போட முதலில் பிசி என வருகிறது. திரும்பவும் கார்த்திக்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க, கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் “முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன்” என்று சொல்கிறான். மேலும் “பூஜையை தொடங்குங்க, நான் வந்து ஜாயின் செய்து கொள்கிறேன்” என்று போனை வைத்து விட்டு பதற்றமாக செல்கிறான். 


அடுத்து வீட்டில் பூஜை தொடங்க, தீபா “இவ பாடுவதை ரெக்கார்ட் செய்து கார்திக்க்கிடம் கொடுக்கலாம்” என்று யோசித்து மீனாட்சியிடம் சொல்ல, அவள் “நான் போய் போனை எடுத்து வரேன்” என்று கிளம்ப, அபிராமி “எங்க போறீங்க? பூஜை முடியும் வரை எங்கயும் போகக் கூடாது” என தடுத்து நிறுத்தி விடுகிறாள்.


மறுபக்கம் போனை திருடிச் சென்றவன் அதை திரும்பவும் அருணாச்சலம் அருகே வீசி விட்டு செல்ல, அவர் கார்த்திக்கு போன் செய்து “எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் பாதுகாப்பாக தான் இருக்கேன்” என சொல்ல கார்த்திக் குழப்பம் அடைகிறான். 


இந்த நேரம் பார்த்து சிதம்பரம் போன் செய்து அருணாச்சலம் பற்றி விசாரிக்க, இவை அனைத்தும் இவருடைய வேலை தான் என்பது தெரிய வருகிறது. பிறகு கார்த்திக் வீட்டிற்குள் நுழைய, பல்லவி பாடி முடிக்க அபிராமி பாட்டு நன்றாக இருந்ததாக பாராட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Cool Suresh: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ்! வெளியான அதிர்ச்சி வீடியோ!


Director Ameer: அடையாளம் தந்த படம், சூர்யாவுக்கு நன்றி.. ‘மௌனம் பேசியதே’ படம் பற்றி அமீர் நெகிழ்ச்சி!