ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசில்.. தலைவர் 170 படத்தின் அப்டேட்


Thalaivar 170: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும்  10ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான டிரெயிலர், காவாலா, ஹுக்கும், ஜுஜுபி பாடல்களை வெளியாகி மாஸ் ஹிட் அடித்தன. ஜெயிலர் படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படிக்க


பிறந்தநாள் கொண்டாடும் தங்கலான் நடிகை.. போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து சொன்ன படக்குழு


பிறந்த நாளை ஒட்டி மாளவிகா மோகனனின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.  ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான்( Thangalaan) படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் படிக்க


ஒற்றைக் கை பந்துவீச்சாளரின் சாகசக்கதை.. பால்கி இயக்கியிருக்கும் கூமர் படத்தின் ட்ரெய்லர் இதோ


சீனே கம், பா, ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய பால்கி தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கூமர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஷபானா ஆஸ்மி, அபிஷேக் பச்சன், சயாமி கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். தனது ஒரு கையை இழந்த நிலையில் தனது முயற்சியால் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஒருவரின் கதையை படமாக இயக்கியிருக்கிறார் பால்கி. மேலும் படிக்க


டோலிவுட்டின் செல்லப்பிள்ளையான சூர்யா... தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன வாரணம் ஆயிரம்... ரசிகர்கள் கொண்டாட்டம்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா மிகவும் பிஸியான ஷெட்யூலில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகரான சூர்யா, தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில்  நடித்து வருகிறார். மேலும் படிக்க


'குட் நைட்' வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டனின் அடுத்த படம்... க்யூட் வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி!


பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே திரையரங்குகளில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு நம்பிக்கையூட்டிய திரைப்படம்  குட் நைட். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இந்தப் படத்தை இயக்கிய நிலையில், நடிகர் மணிகண்டனன் ஹீரோவாக இப்படத்தில் நடித்தார். மேலும் படிக்க


திடீரென மணிரத்னம் வீட்டுக்கு வந்த ‘கொரோனா பேட்ச்’ இயக்குநர்கள்.. ஷங்கர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநார்கள் திடீரென இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  1985 ஆம் ஆண்டு இதயகோயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். வயது தற்போது 67-ஐ கடந்து விட்ட நிலையில், தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குநராக உள்ளார். எந்த இயக்குநர் ஆனாலும் மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற மாதிரியான காதல் காட்சிகள் தங்கள் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் பின்னி விடுவார். மேலும் படிக்க