Thangalaan: பிறந்தநாள் கொண்டாடும் தங்கலான் நடிகை.. போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து சொன்ன படக்குழு

மாளவிகா மோகனனின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்திருக்கும் கேரக்டரின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

Thangalaan: பிறந்த நாளை ஒட்டி மாளவிகா மோகனனின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான்( Thangalaan) படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த தமிழர்களின் துயரத்தையும், தங்களுக்கு சொந்தமான பகுதியை அதன் தலைவன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை கூறும் படமாக தங்கலான் இருக்கும் என கூறப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பு இருந்த வரலாற்றை கூறும் படமாக தங்கலான் இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மூன்று தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று மாளவிகா மோகனின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்திருக்கும் கேரக்டரின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. காட்டுவாசி பெண்ணை போல் உடை மற்றும் ஆபரணங்களை அணிந்திருக்கும் மாளவிகா மோகனன் கையில் ஆயுதத்தை கையில் ஏந்தி இருக்கும் போஸ்டரை பகிர்ந்த ரசிகர்கள், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

முன்னதாக தங்கலான் படித்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய மாளவிகா மோகனன், விக்ரம் இல்லாமல் அந்த கடினமான பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும், படப்பிடிப்பின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் விக்ரம் தனக்கு உதவியாக இருந்தார் என்றும் தெரிவித்தார். தங்கலான் தனித்துவமான உலகம் என்றும், படம் அழகாக உருவாகி இருப்பதாகவும் கூறி இருந்தார்.

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் 2013-ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோன்று தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

மேலும் படிக்க : Maamannan: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாதனை... உலக அளவில் டாப் 10 படங்களில் ‘மாமன்னன்’.. எகிறும் பார்வையாளர்கள்!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola